ADVERTISEMENT

கொரிய தமிழ்ச்சங்க பொங்கல் விழா! - கவிஞர் வைரமுத்து, நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து!

05:20 PM Feb 02, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


மதுரை தமிழ்ச் சங்க இயக்குனர் முனைவர் த. லலிதா அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:

ADVERTISEMENT

அன்பில் தழைத்தோங்கி ஆன்றோரை வணங்கி இன்முகம் கொண்டே இயற்கையைப் போற்றி, பெரிதுவக்கும் இன்பமுற்று உழவரின் வாழ்வை உயர்த்தி எண்ணத்தின் வலிமையோடு தொன்மைத்தமிழுயர பண்பாட்டு விழாக்கள் நடத்தி தொண்மைத் தமிழுயர நாம் உயர்ந்து உளம் நெகிழ்ந்து அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு தமிழ்ப்பெருமைபோற்றிட பொங்கலின் பண்பாட்டு பெருமையை நிலைநாட்டிட வாழ்த்துகிறேன். கொரியாவில் தை மாதம் நிலவும் கடும் குளிரிலும் பொங்கல் நிகழ்வை நடத்தி தமிழ்ப் பண்பாட்டை பரப்பிடும் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும் மக்களுக்கும் எனது வாழ்த்துகள், தமிழ் வாழ்க!

சியோல், தென்கொரியா, திருவள்ளுவர் ஆண்டு 2052, தைத்திங்கள் 18-ம் நாள் ஞாயிறன்று (31 சனவரி 2021) தமிழர் திருநாள் - 2021 இணையவழி இயங்கலையில் நடைபெற்ற கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 நிகழ்விற்கு தமிழ்நாட்டின் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் திருக்கோவிலூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு க.பொன்முடி அவர்கள் வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார்.

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:

இந்த கரோனா சூழலிலும் தமிழ்ப் பண்பாட்டை மறக்காமல் உரிய வழியில் பொங்கல் நிகழ்வை முன்னெடுப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்-கொரிய தொடர்பு குறித்து சில காணொளிகளை பார்த்தும் கேட்டும் வியப்படைந்தேன். வரும் காலங்களில் நானும் திமுக தலைவர் ஸ்டாலினும் கொரியாவிற்கு வருகை தருகிறோம் என்று கூறியிருக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:


கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு பொங்கல் வாழ்த்துகளைக்கூறி, மண், விண், மனிதர், விலங்கு என நான்கையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து தமிழர் திருநாள். இது தமிழனின் பெருமிதம். அனைத்து மதம் கடந்த ஆதி அடையாளம் வள்ளுவரை அழைத்துக்கொள்வோம். வாழ்வதற்கும் வாழ்த்துவதற்கும் என்று கவிப்பேரரசு வைரமுத்து குறிப்பிட்டிருக்கிறார்.

நக்கீரன் ஆசிரியர் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:

தொடர்ந்து நான்காவது முறையாக கொரிய தமிழ்ச்சங்கத்தின் நிகழ்விற்கு மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் ஆசிரியர் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி!

பொங்கல் தமிழ் விழா! தமிழர் விழா! தமிழ்ப் புத்தாண்டு விழா "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனின் வாக்குபோல அனைவரும் கிழக்காசியாவின் ஒரு மூலையில் கொரியாவில் பொங்கலை கொண்டாடுகிறீர்கள்! அங்கு அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்ற நமது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பொங்கலை கொண்டாடிவருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் அனைவரையும் இந்த காணொளி மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், கரோனா பேரிடரை அங்குள்ள நமது மக்கள் அனைவரும் சமாளித்து விட்டீர்கள் என்பதை எமது நிறுவனத்தின் எழுத்தாளர் அண்ணன் ஆதனூர் சோழன் அவர்களிடம் பேசும்பொழுது தெரிந்துகொண்டேன். கடும்குளிரை பொருட்படுத்தாது நடைபெறும் விவசாயிகள் போராட்டம், தொற்றின் அறிவியல் புரிதலைக் கடைப்பிடிக்காமல் தேவைக்குத் தகுந்தவாறு மக்கள் கூடுவதைச் சேர்ப்பது தவிர்க்கச்சொல்வது போன்ற செயல்பாடுகளுக்கு நடுவே அனைத்தையும் கடந்து செல்கிறோம். பொங்கல் விழா என்பது தமிழர் அடையாளத்தை நிலைநிறுத்தி நமக்கு உதவி செய்த மூத்தோர்கள் மற்றும் இயற்கை என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு. பொங்கல் நிகழ்வில் உங்களை காணொளி ஊடகம் வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மூத்த எழுத்தாளர் ஆதனூர் சோழன் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:


கொரிய தமிழ்ச்சங்க தோழமைகளுக்கு வணக்கம்! தங்களோடு நெருங்கி பயணிப்பவன் என்கிற வகையில் கரோனா பெருந்தொற்று காலத்தில் நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை அறிவேன். சிக்கலான சூழலிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீங்கள் பல தலைவர்களையும் ஆளுமைகளையும் அழைத்து நிகழ்ச்சி நடத்தியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் இயல்பில் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவர்களாக இருப்பதால் சங்கத்தின் நிகழ்வுகள் மொழி வளர்ச்சி என்பதையும் தாண்டி அறிவியல், சமுக, மொழித்தொடர்பு ஆராய்ச்சி என புதிய கோணத்துடன் பயணிக்கிறீர்கள். உலகில் வேறு எந்த சங்கமும் பயணிக்காத புதிய பாதையில் மக்களுக்கு பயனுள்ள வகையில் கொரிய தமிழ்ச் சங்கம் பயணிக்கிறது. மீண்டும் உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்.



மக்களிசை பாடகர் திருமதி சின்னப்பொண்ணு குமார் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி:

நமது உழவு செழித்து நெல் பத்தாயங்கள் நிரம்ப இயற்கைக்கு நன்றிகூறி நாம் கொண்டாடும் பொங்கலை கொரிய மண்ணில் முன்னெடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு நன்றிகள். அடுத்தமுறை அங்கு எம்மைப்போன்ற கலைஞர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட சூழல் இடமளிக்கும் என நம்புவோம் என்றார்

திரு பாட்சா, இரசிய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், சென்னை,

தாய்த்தமிழ் உறவுகளுக்கு எனது பொங்கல் நல்வாழ்த்துகள். தமிழ்நாட்டைவிட்டு கடல் கடந்து சென்றாலும், தமிழரின் பண்பாடு மற்றும் அடையாளங்களை மறக்காமல் பொங்கல் நிகழ்வை முன்னெடுக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துகள். உங்களுக்கு வாழ்த்து சொல்லும் வாய்ப்பு கிடைத்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT