ADVERTISEMENT

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார்

12:12 PM Feb 05, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 79. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

1943ல் சுதந்திரத்திற்கு முன்பு டெல்லியில் பிறந்தவர் பர்வேஸ் முஷாரப். தேச பிரிவினையின் போது முஷாரப்பின் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம் பெயர்ந்தது. 1964ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார். முஷாரப், நவாஸ் ஷெரிப் ஆட்சியினை கவிழ்த்து 1999ல் அதிகாரத்தை கைப்பற்றினார். ராணுவ ஆட்சியை பிரகடனம் செய்தபோது பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தையும் கலைத்து முடக்கினார். 2001ல் பாகிஸ்தான் அதிபராக பொறுப்பேற்ற முஷாரப் காஷ்மீர் பிரச்சனைக்காக இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் பாகிஸ்தானை விட்டு துபாய்க்கு வெளியேறிய முஷாரப் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT