ADVERTISEMENT

சீனா உடனான உயிரியல் ஆயுத தயாரிப்பு ஒப்பந்தம் உண்மையா..? பாகிஸ்தான் விளக்கம்...

02:08 PM Jul 27, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனாவுடன் உயிரியல் ஆயுத தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்றை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ஆபத்தான 'ஆந்த்ராக்ஸ்' தொடர்பான பல ஆராய்ச்சி திட்டங்களைச் செயல்படுத்துவது உட்பட, உயிரி போர்த் திறன்களை விரிவுபடுத்துவதற்காக சீனாவும், பாகிஸ்தானும் மூன்று ஆண்டுகளுக்கான ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. கரோனா வைரஸை உருவாக்கியதாக கூறப்படும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, பாகிஸ்தான் இராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புடன் இந்த ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி அமைப்பு பாகிஸ்தானின் ஆராய்ச்சிக்கான அனைத்து நிதி, பொருள் மற்றும் அறிவியல் ஆதரவையும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், “இது அரசியல் ரீதியாக சித்தரிக்கப்பட்டது எனவும், முற்றிலும் உண்மைக்கு மாறானது” என்றும் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT