ADVERTISEMENT

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: ஆறு சீன பொறியாளர்கள் பலி!

01:00 PM Jul 14, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாகிஸ்தான் நாட்டின் கோஹிஸ்தான் மாவட்டத்தில் தாசு பகுதியில் ஓடும் சிந்து நதியில், அந்த நாடும் சீனாவும் இணைந்து நீர் மின் திட்டம் ஒன்றுக்கான கட்டுமானங்களை ஏற்படுத்திவருகின்றன. இந்தநிலையில், அந்தக் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்குப் பொறியாளர்களை அழைத்துச் சென்ற பேருந்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பேருந்திற்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததா அல்லது பேருந்திற்கு வெளியிலிருந்து குண்டு மூலம் இந்தத் தாக்குதல் நடைபெற்றதா என்பது தெரியாத நிலையில், இந்தத் தாக்குதலில் 6 சீன பொறியாளர்களும், ஒரு துணை இராணுவப் படைவீரரும், உள்ளூரைச் சேர்ந்த ஒருவரும் உயிரழந்ததுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தானின் மூத்த அரசு அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு சீனப் பொறியாளரையும், துணை இராணுவப் படைவீரரையும் காணவில்லை எனவும் அந்த மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஹசாரா பிராந்தியத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பேருந்தில் 30 சீன பொறியாளர்கள் பயணித்ததாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT