ADVERTISEMENT

மருத்துவ துறையில் புதிய உச்சம்... புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!

10:21 PM Jun 08, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மன்ஹாட்டனில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோயை 100% குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தை வைத்து சோதனை செய்யப்பட்டதில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் 100% குணமடைந்துள்ளனர். இந்த மருந்து கொடுக்கப்பட்டு புற்றுநோயிலிருந்து பூரண குணமடைந்த பின்பு 25 மாதங்கள் கழித்து அவர்களுக்கு மீண்டும் சோதனை செய்ததில் கேன்சர் செல்கள் எதுவும் புதிதாக தோன்றவில்லை என அந்த மருந்தை ஸ்பான்சர் செய்த கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து மூன்று வாரங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படும். தொடர்ச்சியாக இப்படி ஆறு மாதங்கள் செலுத்தப்பட்ட பின் உடலில் இருக்கும் கேன்சர் செல்களை அடையாளப்படுத்த இது உதவும். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஆச்சரியம் எதுவென்றால் இந்த சிகிச்சையில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பதுதான். இந்திய மதிப்பில் இந்த சிகிச்சைக்கு 9 லட்சம் வரை செலவாகலாம் என்கிறார்கள். ஒருவேளை இது சந்தைக்கு வரும் பொழுது சிகிச்சைக்கான செலவு கூடுதலாக இருக்கலாம். இதை மற்ற மருத்துவர்களும் ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் டோஸ்டார்லிமாப் மார்க்கெட்டிற்கு வருவதற்கு சில மாதங்கள், வருடங்கள் ஆகலாம் என மருத்துவ உலகில் எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT