ADVERTISEMENT

மருத்துவர்கள் அனுமதியோடு தற்கொலை செய்துகொள்ள அனுமதி அளிக்கும் மசோதாவை நிறைவேற்றிய நியூஜெர்ஸி அரசு...

11:42 AM Aug 02, 2019 | kirubahar@nakk…

மீளா நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மருத்துவர்களின் அனுமதியுடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி அளிக்கும் சட்டம் அமெரிக்காவின் சில மாகாணங்களில் அமலில் உள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த சட்டத்திற்கு நியூஜெர்சி மாகாண அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நியூஜெர்சி மாகாண செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான சட்ட மசோதா பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம், தீராத கொடிய நோயால் அவதிப்படும் நோயாளிகள், மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ளலாம். மேலும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தற்கொலைக்கான மருந்துகளை கொடுப்பதற்கு முன்பு நோயாளிகள் நல்ல மனநிலையில் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT