ADVERTISEMENT

முதல் தடவை சறுக்கிய 'நெட்பிளிக்ஸ்'

09:22 PM Apr 20, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திரையரங்குகளுக்கு குடும்பமாக சென்று திரைப்படங்களை பார்வையிட்ட காலங்கள் மாறி இணையதளம் வாயிலாக ஓ.டி.டி தளங்களில் திரைப்படங்களைப் பார்க்கும் கலாச்சாரத்திற்கு மாறும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓ.டி.டி தளத்தில் முன்னணி நிறுவனமாக இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 100 நாட்களுக்குள் இரண்டு லட்சம் சந்தாதாரர்களை இழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பங்குச் சந்தையிலும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளது.

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இவ்வளவு அதிகப்படியாக சந்தாதாரர்களை இழப்பது இதுவே முதல் தடவை என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தியிருந்தது. அந்தவகையில் ரஷ்யாவில் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் தனது சேவையை நிறுத்தியது. இதுவே சந்தாதாரர்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் இழந்ததற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த காலாண்டில் மட்டும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் 1.6 பில்லியின் டாலராக இருக்கும் நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் 25 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தனைக்கும் கடந்த பத்து வருடங்களாக ஓ.டி.டி தளங்களில் முன்னணி இடம் வகித்து வருகிறது 'நெட்பிளிக்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT