ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் ‘பிரெக்ஸிட்’ மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இதையடுத்து முன்னாள் தெரசா மே கடந்த மாதம் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisment

அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.

uk parliament majority drop the pm boris johnson

இந்த நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (03/09/2019) நடைபெற்றது. இந்த சூழலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. பிலிப் லீ என்பவர், லிபரல் கட்சிக்கு மாறியதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.