இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதனை தொடர்ந்து பிற்பகல் மேலும் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi_100.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, “குண்டுவெடிப்பில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு என் சார்பாகவும் இந்திய மக்களின் சார்பாகவும் ஆறுதல் தெரிவித்துகொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இது போன்ற காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலுக்கு இந்த பிராந்தியத்தில் இடமில்லை” என்று கூறியுள்ளார்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “இலங்கையில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்; பயங்கரவாதம் எந்த விதத்தில் இருந்தாலும் இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. பெரும்துயரத்தில் உள்ள இலங்கை மக்களுக்கும், அரசுக்கும் இந்தியா உறுதுணையாக நிற்கும்” எனத் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)