இலங்கையில் ஏற்கனவே காலையில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தொடர்ச்சியாக 6 இடங்களில் குண்டுகள் வெடித்த நிலையில் மேலும் இரு இடங்களில் குண்டுவெடித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தற்போது இலங்கையின் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த 7-வதாக நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இலங்கையின் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8வது குண்டுவெடித்துள்ளது. அது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
குண்டுவெடிப்பு குறித்து போலி செய்திகளும் அதிகம் பரவுவதால் இலங்கையில் சமூகவலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பதற்றத்தை தணிக்க இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 வரை அங்கு ஊரடங்கு உத்தரை அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பிறப்பித்துள்ளார்.