ADVERTISEMENT

சிறுவனுக்கு உதட்டில் முத்தம்; தலாய்லாமா மன்னிப்பு

03:25 PM Apr 10, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, சிறுவன் ஒருவனின் உதட்டில் முத்தமிடுவதும் தனது நாக்கை நீட்டி அதில் முத்தமிடச் சொல்வது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவுகிறது. அந்த வீடியோவில் தனது காலில் விழுந்த சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் தலாய்லாமா பின் தனது நாக்கை நீட்டி சிறுவனது நாக்கை அதில் படுமாறு வைக்கச் சொல்கிறார். ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவின் இந்த செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு, தனக்குப் பின் தலாய்லாமாவாக ஒரு பெண் வந்தால் அவர் மிக அழகாக இருக்க வேண்டும் என தலாய்லாமா பேசியது சர்ச்சை ஆனது. இதற்கு பின் தலாய்லாமா மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் தலாய்லாமாவின் இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் தலாய்லாமாவின் செயலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். சிறுவன், சிறுவனது குடும்பம் மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமுள்ள மக்களிடத்தில் மன்னிப்பு கேட்பதாக தலாய்லாமா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘என் செயல் காயப்படுத்தி இருந்தால் தான் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், சிறுவன் என்ற முறையில் விளையாட்டுத் தனமாக கிண்டல் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடம், கேமரா முன் அப்பாவி, விளையாட்டுத்தனமாக தான் செயல்படுவது வழக்கம்’ எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT