Skip to main content

இந்தியாவில் சாதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்! - தலாய் லாமா வேண்டுகோள் 

Published on 17/04/2018 | Edited on 17/04/2018

இந்தியாவில் இருந்து சாதிமுறை முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் என தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DalaiLama

புத்தமதத் துறவியும், நோபல் பரிசு வென்றவருமான தலாய் லாமா, இமாச்சல் பிரதேசம் மாநிலம் தரம்சாலா பகுதியில் உள்ள ஷுகல்காங் புத்த கோவிலில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் இந்தியாவின் மதநல்லிணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமிக்கது; அது அனைத்து மதங்களுக்கும் மரியாதை தரக்கூடியது என பேசியிருந்தார்.

‘உலகின் மிகப்பெரிய மதப் பாரம்பரியங்களுக்கு எல்லாம் இந்தியாதான் வீடு. அந்த மதங்களை நம்பாதவர்களுக்கும் அங்கு மரியாதை உண்டு. அது மிகவும் அற்புதமானது மற்றும் பெருமைப்பட வேண்டிய விஷயம்’ என தலாய்லாமா தெரிவித்தார். மேலும், ‘உள்ளார்ந்த அமைதிதான் தன்னம்பிக்கைக்கான அடித்தளம். எனவே, பள்ளிகளில் குழந்தைகளுக்கு அந்த உள்ளார்ந்த அமைதி குறித்தும், மதநல்லிணக்கத்தின் வாயிலாக அறநெறிக் கோட்பாடுகளையும் கற்றுத்தரவேண்டும். அதற்கு மாறாக கற்றுத்தரப்படும் சுயத்தை மையம் கொள்ளும் அணுகுமுறைகளைக் கட்டுப்படுத்தி, சாதி முறைகளை இந்தியாவில் இருந்து முழுவதுமாக ஒழிக்கவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் சாதிய, மத ரீதியிலான ஒடுக்குமுறைகள் அதிகரித்து வரும் சூழலில், மதநல்லிணக்கம் மற்றும் சாதி ஒழிப்பு குறித்த தலாய் லாமாவின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுவனுக்கு உதட்டில் முத்தம்; தலாய்லாமா மன்னிப்பு

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

Kiss the boy on the lips; The Dalai Lama is sorry

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, சிறுவன் ஒருவனின் உதட்டில் முத்தமிடுவதும் தனது நாக்கை நீட்டி அதில் முத்தமிடச் சொல்வது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவுகிறது. அந்த வீடியோவில் தனது காலில் விழுந்த சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் தலாய்லாமா பின் தனது நாக்கை நீட்டி சிறுவனது நாக்கை அதில் படுமாறு வைக்கச் சொல்கிறார். ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவின் இந்த செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு, தனக்குப் பின் தலாய்லாமாவாக ஒரு பெண் வந்தால் அவர் மிக அழகாக இருக்க வேண்டும் என தலாய்லாமா பேசியது சர்ச்சை ஆனது. இதற்கு பின் தலாய்லாமா மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் தலாய்லாமாவின் இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் தலாய்லாமாவின் செயலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். சிறுவன், சிறுவனது குடும்பம் மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமுள்ள மக்களிடத்தில் மன்னிப்பு கேட்பதாக தலாய்லாமா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘என் செயல் காயப்படுத்தி இருந்தால் தான் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், சிறுவன் என்ற முறையில் விளையாட்டுத் தனமாக கிண்டல் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடம், கேமரா முன் அப்பாவி, விளையாட்டுத்தனமாக தான் செயல்படுவது வழக்கம்’ எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

சிறுவனுக்கு உதட்டில் முத்தம்; சர்ச்சையில் தலாய்லாமாவின் செயல்

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

Kiss the boy on the lips; Dalai Lama's Action on Controversy

சிறுவர் ஒருவரிடம் தனது நாக்கை நீட்டி முத்தமிடுமாறு புத்த மதத் தலைவர் தலாய்லாமா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 