ADVERTISEMENT

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளையே மாற்றியவர்..?

03:49 PM Apr 11, 2019 | kirubahar@nakk…

ஈக்வடார் நாட்டில் தஞ்சமடைந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த போது டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனின் கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களின் ஈ மெயில்களை ஜூலியன் அசாஞ்சே தேர்தலுக்கு முன்னர் வெளியிட்டார். ஹிலாரி கிளின்டன் கட்சி தலைவர்கள் நடத்திய அந்த உரையாடல்கள் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு பொது வெளியில் வெளியிடப்பட்டது. அப்படி இவர் செய்ததனாலேயே டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பு அதிகமானதாகவும் கூறப்படுகிறது. இப்படி அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளையே மாற்றியமைத்ததாக கூறப்படும் இவரை ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக குற்றவாளியாக அறிவித்தது அரசு. அதனை தொடர்ந்து அசாஞ்சே ஈக்வடார் நாட்டின் ஆதரவில் லண்டனில் வசித்த வந்தார். இந்நிலையில் ஈக்வடார் நாடு அவருக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொண்டு நிலையில் இன்று லண்டன் போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT