உலகின் எந்த நாட்டிடமும் இல்லாத அணு ஆயுதம் ஒன்றை அமெரிக்கா வைத்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலை அமெரிக்கா கையாண்ட விதம் குறித்து அமெரிக்கபத்திரிகையாளர் பாப் உட்வர்ட் Rage என்ற புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இதில் ட்ரம்ப்புடன் அவர் மேற்கொண்ட உரையாடல் குறித்துபகிர்ந்துள்ளார். ட்ரம்ப் உடனான அந்த உரையாடலில், "நான் ஒரு ரகசிய அணு ஆயுதத்தை உருவாக்கியுள்ளேன். இதற்கு முன்னர் இந்த நாட்டில் யாரும் இல்லாத ஆயுத அமைப்பு அது. புதின் மற்றும் ஜி ஜின்பிங் கூட இதற்கு முன்னர் கேள்விப்படாத "பொருள்" அமெரிக்காவில் உள்ளது. இது யாராலும் நம்பமுடியாத ஒன்று. 2018 ஆம் ஆண்டு அமெரிக்கபடையில் சேர்க்கப்பட்ட இது, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட அதிக ஆற்றலைக் கொண்டது" எனத் தெரிவித்துள்ளதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.