ADVERTISEMENT

வெளியான வீடியோ... முடிவுக்கு வந்த ஜாக் மா சர்ச்சை!

12:11 PM Jan 20, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அலிபாபா நிறுவனத்தின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஜாக் மா, கடந்த வருடம் ஒரு மாநாட்டில் சீன அரசை விமர்சித்துப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து சீன அரசு, கடந்த சில ஆண்டுகளாக அலிபாபா நிறுவனம் செய்த முதலீடுகள் குறித்து விசாரணையில் இறங்கியது.

இதனையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், ஜாக் மா பொதுவெளியில் தோன்றவில்லை எனவும், அவர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் பரவின. அரசை விமர்சித்த கோடீஸ்வரர் காணாமல் போய்விட்டதாக பரவிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதல்முறையாக ஜாக் மா, பொது வெளியில் தோன்றியுள்ளார். அவர், கிராமப்புற ஆசிரியர்களிடம் காணொலி மூலமாக உரையாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. ஜாக் மா காணொலி வாயிலாக உரையாற்றியதை சீன ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதன்மூலம் ஜாக் மா காணாமல் போய்விட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT