jack maw

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அலிபாபா இணைய வணிக நிறுவனதின் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் மா ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

1999-ஆம் ஆண்டு சீனாவின்ஆங்சூவில் நிறுவப்பட்ட அலிபாபா இணைய வணிக நிறுவனம் தற்போது உலக இணைய வணிக நிறுவனங்களின் பட்டியலில் 5 இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் பங்கு சந்தை பட்டியலிலும் இடம்பிடித்தது அலிபாபா. இன்றய நிலவரப்படி அலிபாபாவின் மொத்த சந்தை மதிப்பு 3 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். நிறுவனம் வளர வளர அலிபாபா நிறுவனரில் ஒருவரான ஜாக் மாவின் சொத்து மதிப்பும் உயர்ந்தது. சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஜாக் மாவின்தற்போதைய சொத்து மதிப்பு 2 லட்சத்து 34 ஆயிரம் கோடிகள் ஆகும். இவர் அலிபாபாவில் இணைவதற்கு முன் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.

Advertisment

இந்நிலையில் 54 வயதாகும் ஜாக் மா அலிபாபா நிறுனவன பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். வரும் திங்கள் கிழமை அன்று பணி ஓய்வு பெற இருப்பதாக தெரியவருகிறது.