ADVERTISEMENT

731 வங்கிகள், 140 அரசு அலுவலகங்கள் தீயிட்டு எரிப்பு... ஈரான் அரசு வெளியிட்ட அறிக்கை...

05:05 PM Nov 27, 2019 | kirubahar@nakk…

எரிவாயுப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட வன்முறைப் போராட்டங்களில் ஈரான் நாடு முழுவதும் சுமார் 731 வங்கிகளும், 140 அரசு அலுவலங்களும் எரிக்கப்பட்டுள்ளன என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த வாரம் ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை 50 சதவீதம் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்கள் வன்முறையாக வெடித்தது. இதில் 731 வங்கிகளும், 140 அரசு அலுவலங்களும் எரிக்கப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அப்துல்ரேசா ரஹ்மானி தெரிவித்துள்ளார். மேலும், 70 பெட்ரோல் நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்று ஆம்னெஸ்டி அமைப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT