ADVERTISEMENT

சீனாவின் முதல் தோல்வி; இந்தியா மீது மீண்டும் தாக்குதல்...?

02:53 PM Sep 15, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன, இந்திய ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட இந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல சீன தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த மோதலை தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எல்லைப்பகுதியில் அமைதி திரும்பியது.

இருந்தபோதிலும் கடந்த 29 மற்றும் 30-ம் தேதிகளில் பாங்காங் ஏரிப் பகுதியின் தென்முனையில் ஏற்கனவே இருக்கும் பகுதியைத் தன்னிச்சையாக மாற்றும் நடவடிக்கையில் சீன ராணுவத்தினர் முயன்றபோது, இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி பதிலடி கொடுத்தனர். அமைதி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழலே நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் சமீபத்தில் இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த பேச்சுவார்த்தையில், எல்லைப்பிரச்சனையை தீர்க்க ஐந்து அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளைப் பின்பற்றி எல்லைப் பிரச்சனையைத் தீர்க்க இந்த திட்டம் வகுக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூஸ்வீக் வெளியிட்டுள்ள சிறப்பு கட்டுரையில், இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதற்கு அதிபர் ஜின்பிங் தான் காரணம். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முயற்சியில் சீன ராணுவம் தோல்வியடைந்தது. இது, பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு, ஜின்பிங்கிற்கு, இந்தியா மீது மற்றொரு தாக்குதல் நடத்தவும் இந்த தோல்வி தூண்டுவதாக உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சனையானது பல ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் எந்த அத்துமீறலுக்கும் இந்தியா வாய்ப்பளிக்க தயாராக இல்லை. பல ஆண்டு விதிமுறைகளை மீறியதாக இரு ராணுவமும் மாறி மாறி புகார் கூறிக் கொள்கின்றன. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டுரையில் இந்திய இராணுவத்தின் பலம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT