ADVERTISEMENT

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் விண்ணப்பிப்பது , பெறுவது எப்படி?

10:18 AM Mar 12, 2019 | Anonymous (not verified)

பிறப்பு சான்றிதழ் , இறப்பு சான்றிதழ் குறித்த தொகுப்பு !

ADVERTISEMENT

ஒவ்வொருவருக்கும் "பிறப்பு சான்றிதழ்" என்பது மிக முக்கியமானதாகும். இந்த சான்றிதழ் ஆனது பள்ளியில் சேரவும் , பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, திருமணத்துக்கு உரிய வயதை நிரூபிக்க , வாக்குரிமை பெற , ஓட்டுநர் உரிமம் , மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றிற்கு "பிறப்பு சான்றிதழ்" மிக அவசியமாகும். பொது சுகாதாரம் , மருத்துவம் சமந்தமான தேசிய திட்டங்களை வகுக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை கட்டாயம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை மாநில அரசும் தேவையான எளிமையான முறையை கையாண்டு வருகிறது.

ADVERTISEMENT

பிறப்பு , இறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

பிறப்பு , இறப்பு பதிவுகள் சட்டம் 1969 யின் படி ஒருவரின் இறப்பு மற்றும் பிறப்பை 21 நாட்களுக்குள் பதிவு செய்தல் மிகவும் கட்டாயம். எங்கு சென்று பதிவு செய்வது ? பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வோரின் பகுதியை பொருத்து அமைந்தது. இதன் படி மாநகராட்சியாக இருந்தால் இந்த அலுவலகத்தை நாட வேண்டும். கிராமமாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலர் , நகராட்சியாக இருந்தால் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று இறப்பு , பிறப்பு பதிவுகளை அலுவலர்களின் உதவியோடு பதிவு செய்ய வேண்டும். இதற்கென அலுவலர்களை அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நியமித்துள்ளனர். ஒவ்வொரு அலுவலருக்கும் பகுதிகளின் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளே மாநகராட்சி மற்றும் நகராட்சி , கிராம பஞ்சாயத்து ஒப்புதல் உடன் பிறப்பு சான்றிதழ் வழங்கலாம் என மத்திய , மாநில அரசுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்ட பின்பும் அதிகாரிகள் சான்றிதழை வழங்க தவறினால் அதிகாரியின் மீது சமந்தப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் , வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளிக்கலாம்.

பதிவு செய்த சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டணம்?

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை தேடுவதற்கு ரூபாய் 2யை கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ஒவ்வொரு கூடுதல் ஆண்டும் தேட ரூபாய் 2யை கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இல்லா சான்றிதழை பெறவும் (Non- Availability Certificate)ரூபாய் 2 யை கட்டணமாக செலுத்த வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற வேண்டுமென்றால் ரூபாய் 5.00 கட்டணமாக செலுத்தி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். வீட்டிலேயே குழந்தை பிறந்தாள் சமந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். இவர் 21 நாட்களுக்குள் சமந்தப்பட்டவருக்கு பிறப்பு சான்றிதழை வழங்குவர்.

இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் 21 நாட்களுக்குள் பெறவில்லையா?

21 நாட்களுக்கு மேல் ஒரு வருடம் வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய தவறினால் தாசில்தாரிடம் மனு அளித்து தாமத கட்டணத்தை மாநகராட்சி , நகராட்சி , கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட அலுவலகங்களில் செலுத்தி சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு வருடத்திற்கு மேல் இறப்பு மற்றும் பிறப்பு பதிவுகளை செய்ய தாமதமா?

ஒர் ஆண்டுக்கு மேல் இறப்பு மற்றும் பிறப்பு விவரங்களை பதிவு செய்ய தவறினால் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் சட்டம் - 1969 , பிரிவு (13) 3-ன் கீழ் சமந்தப்பட்ட நபர் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அல்லது மாநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். பிறப்பு , இறப்பு சான்றிதழ்களை சமந்தப்பட்ட பெற்றோர் மற்றும் வாரிசுதாரர்கள் மட்டுமே நீதிமன்றத்தை அணுக முடியும்.

நீதிமன்றத்தில் பிறப்பு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் !

1. பிறந்த தேதி அறிந்த மூன்றாம நபரின் வாக்குமூலம் .

2. பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் இருந்து பெறப்பட்ட பதிவில்லா சான்றிதழ் .

3.ஜாதகம்.

4. பள்ளி சான்றிதழ்

5. மருத்துவமனை அதிகாரியின் சான்றிதழ்.

நீதிமன்றத்தில் இறப்பு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் !

1. புதைக்கப்படும் அல்லது கல்லறை அலுவலரின் சான்றிதழ்.

2.மருத்துவ அதிகாரியின் சான்றிதழ்.

3.இறப்பை பற்றி அறிந்த மூன்றாம் நபரின் வாக்குமூலம்.

4. ஏதேனும் நம்ப தகுந்த ஆவணங்கள்.

பதிவாளரிடம் இறப்பு மற்றும் பிறப்பை தெரிவிக்க வேண்டியவர்கள் .


வீட்டில் நடக்கும் இறப்பு மற்றும் பிறப்பு குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் , மருத்துவமனையில் இறப்பு மற்றும் பிறப்பு சமந்தமாக மருத்துவமனையின் மருத்துவர் , சாலையில் நடக்கும் இறப்பு குறித்து சமந்தப்பட்ட பகுதியின் அரசு அதிகாரிகளின் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்க நடவடிக்கையை அரசுகள் எடுத்து வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இணையதளம் மூலம் இறப்பு மற்றும் பிறப்பு விவரங்களை பதிவு செய்யவும் , இணையதளம் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதியை சென்னை உட்பட பல மாவட்டங்கள் மாநகராட்சி மூலம் மக்களுக்கு எளிமையான முறையில் இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழக பேரூராட்சி இயக்கத்தின் மூலம் இணையதளத்தில் பிறப்பு / இறப்பு சான்றிதழ்களை கட்டணத்தை செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முகவரி : http://etownpanchayat.com/PublicServices/Birth/ApplyBirth.aspx#! பெரு நகர சென்னை மாநகராட்சியும் இணையதள வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. முகவரி : http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthanddeath.htm பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களை கட்டாயம் பதிவு செய்வது நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை சார்ந்தது . எனவே இது தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மக்கள் ஒருங்கிணைந்து இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


பி . சந்தோஷ் , சேலம் .

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT