ADVERTISEMENT

டிஎஸ்எல்ஆர் (DSLR) கேமராக்களை ஓவர்டேக் செய்யும் மொபைல் ஃபோன்கள்...!

03:11 PM Dec 10, 2018 | tarivazhagan

சீன நிறுவனமான ஹவாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஹானர் ஃபோன், புதிதாக வரவிருக்கும் தனது நிறுவனத்தின் புதிய ஃபோன் மாடலான வியூ20-ல் (view20) 48எம்.பி (மெகா பிக்ஸல்) கேமராவுடன் அறிமுகம் செய்யவுள்ளது. இது 22 ஜனவரி 2019-ல் பாரிஸில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படுமென அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த மாடல் ஃபோனில் ஒரே நேரத்தில் வை-பை மற்றும் மொபைல் இன்டர்நெட் இரண்டையும் பயன்படுத்தும் விதமாகவும் வியூ20 ஃபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வை-பை வேகமாக இருந்தால் வை-பையும், மொபைல் இன்டர்நெட் வேகமாக இருந்தால் மொபைல் இன்டர்நெட்டையும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பயன்படுத்தமுடியும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஹானரைத்தவிர சோனி, சாம்ஸங் ஆகிய நிறுவனங்களும் 48எம்.பி கேமரா வசதியுடன் ஃபோன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT