சீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹவாய் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வேன்ஜூ மெங் (Wanzhou meng) கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி செயல்பட்டார் என்றும் மற்றும் மோசமான வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார் என்றும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Advertisment

hh

சீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹவாய் டெக்னாலஜீஸ் கோ லிமிடெட் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 170 நாடுகளுக்கு தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

இதில், கடந்த மாதம் இறுதியில் நியூஸிலாந்தின் ஸ்பார்க் தொலைத்தொடர்பு நிறுவனம் 5ஜி சேவைக்காக சில உபகரணங்களை ஹவாய் நிறுவனத்திடமிருந்து வாங்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தேசிய பாதுகாப்பின்மையின் காரணமாக அதனை நியூஸிலாந்து அரசு நிறுவனம் நிராகரித்தது. மேலும் இதற்குமுன் இதே காரணத்தைக்கொண்டு ஹவாய் நிறுவனத்தின் உபகரணங்களை ஆஸ்திரேலியாவும் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்கனவே வர்த்தக போர் நிலவிவரும் நிலையில் இந்த நடவடிக்கை கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.