ADVERTISEMENT

ஒரு நியூஸ் படிப்பதால் இத்தனை ஆயிரம் கோடி வருமானமா..! அசர வைக்கும் கூகுளின் லாப கணக்கு...

01:14 PM Jun 11, 2019 | kirubahar@nakk…

2018ம் ஆண்டு செய்திகள் மூலம் மட்டுமே கூகுள் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,700 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவின் என் எம் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவின் மொத்த செய்தி துறையின் வருவாய் ரூ.5.1 பில்லியன் டாலர்கள் எனவும், அதில் கூகுள் பங்கு மட்டும் 4.7 பில்லியன் டாலர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. கூகுள் மூலம் நாம் தேடி ஒரு செய்தியை படிக்கிறோம் என்றால், நாம் அப்படி படிக்கும் ஒவ்வொரு செய்திக்கும் கூகுள் நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது.

அப்படி கடந்த 2018 ஆம் ஆண்டில் வெறும் செய்தி வாசிப்பின் மூலமாக மட்டும் 32,700 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது கூகுள் நிறுவனம். இது குறித்து கருத்து தெரிவித்த என் எம் ஏ தலைவர் டேவிட், செய்தி நிறுவனங்களால் கூகுள் அதிக லாபம் அடைகின்றன. ஆனால் அந்த லாபத்தில் செய்தி நிறுவனத்துக்கும், செய்திகளை எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் துளியும் பங்கு இல்லை. இந்த முரண்பாடு கவலையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அதுபோல கூகுள் நிறுவனம் 2018-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மட்டுமே மொத்தமாக 39.3 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT