ADVERTISEMENT

போர் பதற்றத்தை தொடர்ந்து ஈரானை தாக்கிய நிலநடுக்கம்... அச்சத்தில் பொதுமக்கள்!

09:02 PM Jan 08, 2020 | suthakar@nakkh…

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு ஒரே நாளில் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது.


ADVERTISEMENT


மேலும் இன்றும் இந்த விலையேற்றம் தொடர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரான் விமான படையினர் இன்று ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இரு நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க விமானம் பறக்க தற்போது அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஈரான் நாட்டில் உள்ள புஷ்பார் அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ரிக்டர் அளவில் 4.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுமக்கள் போர் பதற்றத்தில் இருக்கும் நிலையில் இந்த நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT