Published on 16/08/2018 | Edited on 16/08/2018

அந்தமான் தீவு பகுதியில் இன்று மதியம் 1:43மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய புவிசார் ஆய்வு மையம், பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவுகோல் 4.7ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேபோல கடந்த ஆறாம் தேதி அன்று காலை அந்தமான் நிக்கோபாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.3ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவானது குறிப்பிடத்தக்கது.