ADVERTISEMENT

பிரிட்டன் அரசியலில் அதிரடி மாற்றம்... இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பிரதமர் ஆக வாய்ப்பு!

05:29 PM Jul 07, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அந்த அரசில் இருந்து அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டனின் புதிய பிரதமரை கட்சி தேர்ந்தெடுக்கும் என்றும் அதுவரை இடைக்கால பிரதமராக தான் செயல்படுவேன் என்றும்,. அடுத்த வாரத்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கும் எனவும் ஜான்சன் அறிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் முதன்முறையாக நிதித்துறை அமைச்சர் ரிஷி சுனாக் பதவி விலக, தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சரும் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் கடந்த இரண்டு நாட்களில் மொத்த அமைச்சரவையும் காலியான நிலையில், தன் தலைமையின் மீது நம்பிக்கை இல்லை என உணர்ந்த ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனாக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில், அப்படி நிகழ்ந்தால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு வலுப்படும் எனக் கருதப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT