/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/BORRIS.jpg)
இங்கிலாந்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியகுடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால் மரபணு மாற்றமடைந்த (இங்கிலாந்திலிருந்து பரவிய கரோனா) கரோனாபரவல் வேகமெடுத்ததால் இந்த பயணம் இரத்தானது. இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் இல்லாமல் கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில்ஏப்ரல் 26 ஆம் தேதி போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளார். அப்போது அவர் சென்னைக்கும்வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. சென்னையில் அவர் கலந்துகொள்ளும்நிகழ்ச்சிகளின்பட்டியல் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னைக்கு இறுதியாக வந்த வெளிநாட்டு தலைவர் சீன அதிபர் ஜின்பிங் ஆவர். இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறுவிஷயங்கள் தொடர்பாக மாமல்லபுரத்தில் சந்தித்து விவாதித்தார்கள். அப்போது ஜின்பிங், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)