ADVERTISEMENT

ட்ரம்ப்புடன் விளையாட வேண்டாம்! - வடகொரிய அதிபருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

03:00 PM May 23, 2018 | Anonymous (not verified)

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் விளையாட வேண்டாம் என வடகொரிய அதிபர் கிம்முக்கு அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பிற்கு முன்பாக வடகொரிய அதிபர் கிம்முக்கு ட்ரம்ப் சில நிபந்தனைகளை விதித்திருந்தார்.

அதில், அணுஆயுத அழிப்பிற்கு வடகொரிய அதிபர் கிம் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், லிபியாவின் அதிபர் கடாபிக்கு நேர்ந்ததுதான் கிம்முக்கும் நேரிடும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் மைக் பென்ஸ் இந்த உச்சிமாநாடு குறித்து பேசுகையில், ‘வடகொரிய அதிபர் கிம் அதிபர் ட்ரம்ப்புடன் விளையாட நினைக்க வேண்டாம். அப்படி நடந்துகொண்டால் அது மிகப்பெரிய தவறாக முடியும். அதேபோல், அமெரிக்கா-வடகொரியா இடையிலான உச்சிமாநாட்டில் இருந்து ட்ரம்ப் வெளியேறிவிடுவார்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT