Skip to main content

தென்கொரியாவுடன் மீண்டும் போர்ப்பயிற்சி? - கிம்முக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

தென் கொரியாவுடன் மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுபடக் கூடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

trump

 

 

 

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் இடையேயான சந்திப்பு, மலேசியாவில் கடந்த ஜூன் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது ட்ரம்ப் மற்றும் கிம் தனிப்பட்ட முறையிலும், பின்னர் உயர்மட்டக் குழுவினருடனும் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
 

அப்போது அணுஆயுத ஒழிப்பு குறித்த ஒப்பந்தத்தை வடகொரிய அதிபரும், தென்கொரியாவில் போர்ப்பயிற்சியை நிறுத்திக் கொள்வது குறித்து அமெரிக்க அதிபரும் அறிவிப்பை வெளியிட்டனர். இதனால், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
 

 

 

இந்நிலையில், வடகொரியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் பட்சத்தில், தென்கொரியாவில் மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவோம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வடகொரிய அதிபருடனான சந்திப்பில் தென்கொரியாவில் போர்ப்பயிற்சி நிறுத்தம் குறித்த யோசனையை நான்தான் முன்வைத்தேன். தென்கொரியாவில் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதால், எங்களுக்கு அதிக செலவு ஆகிறது. அதுமட்டுமின்றி, நல்லெண்ணத்துடன் நடக்கும் பேச்சுவார்த்தையின் மீது அது சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. அதனால் மட்டுமே போர்ப்பயிற்சி நிறுத்தம் குறித்து பேசினேன். ஒருவேளை வடகொரியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் உடனடியாக தென்கொரியாவில் போர்ப்பயிற்சியை தொடங்குவோம்’ என எச்சரிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்