ADVERTISEMENT

மான் வயிற்றில் 7 கிலோ பிளாஸ்டிக்... நடந்த விபரீத முடிவு!

08:31 PM Nov 27, 2019 | suthakar@nakkh…


தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அருகில் உள்ள நன் என்ற மாகாணத்தில் உள்ள தேசிய பூங்காவில் மான் ஒன்று உயிரிழந்துள்ளது. அதனை உடற்கூராய்வு செய்த கால்நடை மருத்துவர்கள் அதன் வயிற்றில் இருந்து 7 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளனர். அதிக அளவில் பிளாஸ்டிக்கை உட்கொண்டதால் மான் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT



தேசிய பூங்காவில் உள்ள மான் இவ்வளவு பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்தினை இந்த சம்பவம் உணர்த்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT