ADVERTISEMENT

இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்

10:52 PM May 06, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுப் பின்வாங்கப்பட்ட நிலையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்ட ஒழுங்கை நிலை நாட்ட அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT