ADVERTISEMENT

நாட்டு எல்லையைத் தாண்டியதால் மாட்டுக்கு மரண தண்டனை...    

05:47 PM Jun 06, 2018 | vasanthbalakrishnan

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான பல்கேரியாவைச் சேர்ந்த கர்ப்பமான பசு ஒன்று, செர்பியா எல்லைப் பகுதியைத் தாண்டியதால் தற்போது மரண தண்டனையை நோக்கியுள்ளது.

ADVERTISEMENT



ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க கால்நடை வளர்ப்பு கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அங்கு கொண்டு வரப்படும் விலங்குகள் கடும் பரிசோதனைக்கு உட்பட வேண்டும், அதற்கான சான்றிதழ்கள் இருந்தால்தான் அனுமதிக்கப்படும். இப்படிப்பட்ட விதிமுறையை மீறியதாகக் கூறி 'பென்கா' என்ற இந்தப் பசு மாட்டை, கொலை செய்தே ஆக வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் ஒற்றைக்காலில் நிற்கின்றனர். ஆனால், இந்தப் பசுமாட்டை காப்பாற்றியே ஆகவேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பல்கேரிய மக்களில் இருந்து பல்வேறு நாட்டு மக்களும் கர்ப்பமாக இருக்கும் பென்கா பசுவுக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT


ஐரோப்பிய யூனியனின் கீழ் உள்ள நாடுகளைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து கால்நடைகள் கொண்டுவரப்பட்டால் பல விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. வெட்னரி மருத்துவமனையில் மருத்துவர்களிடம் பல சான்றிதழ்கள் வாங்கப்பட்டு, கால்நடைகளுக்கு எந்த தொற்று நோயும் இல்லை என்று உறுதிசெய்த பிறகுதான் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. அதிகாரிகளின் ஒப்புதல் இல்லை என்றால் அந்த கால்நடைகளை கொல்வது வழக்கம். நோயுற்ற கால்நடைகள் மூலம் வேறொரு கால்நடைக்கு நோய் பரவாமல் இருக்க அவ்வாறு செய்கின்றனர்.

பென்கா என்ற பல்கேரியாவைச் சேர்ந்த கர்ப்பமான பசு மாடு மேய்ந்துகொண்டே வழிதவறி அண்டை நாடான செர்பியா எல்லைப் பகுதிக்குள் சென்றுவிட்டது. பல்கேரியாவைச் சேர்ந்த இவான் என்பவர் தனது பண்ணையில் பல மாடுகளை வளர்த்துவருகிறார். அதில் ஒன்றான பென்கா மேய்ந்துகொண்டிருக்கும் போது வழி தவறி அருகிலுள்ள செர்பியா பகுதிக்குள் சென்றுவிட்டது. அப்போது அங்கே வேலை செய்து கொண்டிருந்த செர்பிய விவசாயிகள், வேறொரு மாடு போன்று இருக்கிறது என்று சந்தேகப்பட்டு அங்கே கட்டி வைத்துள்ளனர். பின்னர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அதிகாரிகள் வந்து பார்த்தபொழுது அது கர்ப்பமாக இருப்பது தெரியவந்து, அதன் உரிமையாளரான பல்கேரியாவைச் சேர்ந்த இவானிடம் தகவல் சொல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்குப்பின் தான் பிரச்சனை ஆரம்பமே ஆகிறது. ஒப்புதல் இல்லாமல் மற்ற நாட்டு கால்நடைகள் வந்தால் கொன்றுவிடும் ஐரோப்பிய யூனியன் விதிமுறைகள், தற்போது யூனியனில் இருக்கும் நாட்டைச் சேர்ந்த மாட்டையே கொல்ல வேண்டும் என்கிறது. அதாவது, அது என்னதான் பல்கேரியாவைச் சேர்ந்த மாடாக இருந்தாலும், செர்பியாவுக்குள் நுழைந்துவிட்டு வருகிறது. ஆதலால் அது தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று மாட்டைக் கொல்ல உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து அந்தப் பசுவின் உரிமையாளர் 'மற்ற நாடுகளுக்குத்தான் அந்த சட்டம் எல்லாம், சொந்த மாட்டுக்கல்ல' என்றார்.


பசுவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய போதும் 'மாட்டுக்கு நோய் ஒன்றும் இல்லை நன்றாகத்தான் இருக்கிறது' என்றே முடிவுகள் வந்துள்ளன. ஆனால், ஐரோப்பிய யூனியனோ ஒரு மாட்டுக்காக சட்டத்தை விட்டுக்கொடுப்பதா என்று அடம் பிடிக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் இதனை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பென்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தும் ஆதரவு திரட்டியும் வருகின்றனர் . இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாக் என்ற ஒரு அமைச்சரும் இதனை எதிர்த்து கடிதம் ஒன்றை ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பியுள்ளார். இந்தியாவில் மாட்டுக்காக மனிதரைக் கொன்றார்கள், அங்கு சட்டத்துக்காக அப்பாவி மாட்டைக் கொல்கிறார்கள். இரண்டுமே கொடுமைதான்.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT