ADVERTISEMENT

ஒரே ஒரு நபருக்கு கரோனா; ஊரடங்கு அமல்; பேருந்து சேவைகள் ரத்து - அதிரடி காட்டும் சீனா!

05:33 PM Oct 28, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதன்முதலில் கரோனா பரவிய நாடான சீனாவில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அண்மைக்காலமாக அந்தநாட்டில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஜீரோ கரோனா அணுகுமுறையைப் பின்பற்றும் சீனா, கரோனா பரவும் பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து அதன் பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் சீனா நேற்று முன்தினம், 35,700 பேர் வசிக்கும் எஜின் பகுதியில் ஊரடங்கை அமல்படுத்தியது. அப்பகுதியில் ஒருவாரத்தில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியானதையடுத்து சீனா இந்த நடவடிக்கையை எடுத்தது.

அதனைத்தொடர்ந்து நேற்று, 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்ஜோவ் நகரில் சீனா ஊரடங்கை அமல்படுத்தியது. அக்டோபர் 17 முதல் நேற்றுவரை 39 கரோனா பாதிப்புகள் பதிவானதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது 60 லட்சம் பேர் வசிக்கும் ஹெய்கே நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே ஒரு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கைப் பொறுத்தவரை, மக்களுக்கு வீட்டிற்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் அந்த நகரில், பேருந்து, டாக்கி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நகரை விட்டு வெளியேற வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT