
உலகம் முழுவதும் கரோனா பீதியால் பல நாடுகளில் திரையரங்கங்கள் திறக்கப்படாமல் இருக்கிறது. இதனால் புது படங்களும் திரையரங்கில் வெளியாகாமல் இருக்கின்றன. சீனாவில் தற்போது கரோனா பீதி அடங்கியிருப்பதால் திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. புது படங்கள் வெளியாகாததால் பழைய திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 2001ஆம் ஆண்டு வெளியான 'ஹாரிபாட்டர் அண்ட் தி ஸார்ஸரர்ஸ் ஸ்டோன்' திரைப்படம் 3டி மற்றும் ஐமேக்ஸ் பதிப்புகளாக கிட்டத்தட்ட 16,000 திரைகளில் சீனாவில் மீண்டும் வெளியானது. வெளியான முதல் வார இறுதியிலேயே 13.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தற்போது இந்த வசூலால் வெளியாகி 19 வருடங்கள் கழித்து ஒரு பில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது. முன்னதாக இந்த சீரிஸில் கடைசியாக வெளியான 'ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் - பாகம் 2' மட்டுமே ஒரு பில்லியன் டாலர் வசூலைக் கடந்திருந்தது.