ADVERTISEMENT

இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாத அமைப்பின் தளபதி சுட்டுக் கொலை!

12:11 PM Nov 11, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப், கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி பாகிஸ்தானில் சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஒருவரும் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த பயங்கரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த பயங்கரவாத அமைப்பினர் கைபர் துங்க்வா மாகாணம் பஜீர் பகுதியில் முகாமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், இந்த அமைப்பின் தளபதியான அக்ரம் கான் அங்கு பதுங்கி இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், அக்ரம் கான் அங்குள்ள முகாமில் திடீரென்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அக்ரம் கான் அந்த பயங்கரவாத அமைப்பில் நிலவிய அதிகார போட்டி காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர். மேலும், கொலையாளிகளைப் பிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அக்ரம் கான் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஆவார். எனவே, இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT