ஜம்மு காஷ்மீர் விவகாரம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், ராஜோரி மாவட்டத்திலுள்ள நவ்ஷரா செக்டாரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

Advertisment

ceasefire in india pakistan border

இன்று காலை நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில் இந்திய படைகள் தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.கொல்லப்பட்ட ராணுவ வீரர் டேராடூனைச் சேர்ந்த லன்ஸ் நாயக் சந்தீப்(35) என தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாக சந்தீப் பணியாற்றியுள்ளார். இந்த சூழலில் இந்திய ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.