ADVERTISEMENT

காஷ்மீர் குறித்து ஐ.நா வில் ரகசிய விவாதம்... பாகிஸ்தான் பங்கேற்க முடியாது...

12:25 PM Aug 16, 2019 | kirubahar@nakk…

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக இன்று ஐ.நா சபையில் ரகசிய விவாதம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உலகநாடுகளின் ஆதரவை பெற பிரதி வந்த பாகிஸ்தானுக்கு எந்த நாடுகளும் ஆதரவு தராத நிலையில், சீனா மட்டும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஐ.நா வில் விவாதம் நடத்த வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி சீனா வேண்டுகோள் வைத்தது. சீனாவின் இந்த வேண்டுகோளை ஏற்ற ஐநா பாதுகாப்பு கவுன்சில், மூடப்பட்ட அறையில் நடக்கும் ரகசிய விவாதத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இதில் பாகிஸ்தான் கலந்து கொள்ள முடியாது.

விவாதிக்கப்படும் விஷயங்கள் ஊடகங்களுக்கு பகிரப்படமாட்டாது என்பதாலும் அங்கு விவாதிக்கப்படும் விவகாரங்கள் பதிவு செய்யப்படாது என்பதாலும் ‘மூடுண்ட அறை’ விவாதம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக ஊடக அதிகாரி தெரிவித்தார். இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போலந்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மூடிய அறையில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த கவுன்சிலில் சீனா, அமெரிக்கா பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நிலையில், சீனா மட்டுமே இதில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT