ADVERTISEMENT

விவசாயிகளை குறிவைக்கிறது சீனா! டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு!!

12:29 PM Jul 26, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வர்த்தக போரில் சீனா அமெரிக்க விவசாயிகளுக்கு குறிவைக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 34 பில்லியன் டாலர் அளவிற்கு அமேரிக்கா அதிபர் டிரம்ப் வரிவித்திருந்தார்.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப்போர் நிலவிவந்த சூழலில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் விமானபாகங்கள், வேளாண்பொருட்கள், செமிகண்டக்டர்கள் உள்ளிட்ட பலபொருள்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வருங்காலத்தில் இந்த வரிவிதிப்பு மேலும் 550 பில்லியன் டாலரை எட்டலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

அதேபோல் சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் சோயாபீன்ஸ்,பன்றி இறைச்சிக்கு வரிவிதிப்பை கூட்டியது. இந்த வரிவிதிப்பு போரில் சீனா மீதான அமெரிக்க வரிவிதிப்பு இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படி சீனாவிற்கும் அமரிக்காவிற்கும் வர்த்தக போர் முற்றிய நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் '' தீய நோக்கத்துடன் சீனா அமெரிக்க விவசாயிகளை குறிவைத்துள்ளது இது தோல்விக்கான முயற்சி. தற்போது வரை தாங்கள் நன்றாகதான் உள்ளோம்'' என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT