ADVERTISEMENT

சிமெண்ட் விலை அதிகரிக்கும்... உற்பத்தியாளர்கள் தகவல்!

05:36 PM Oct 07, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிமெண்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் அதிகரிக்கும் என சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் வரை விலை அதிகரிக்கும்.

நாடுமுழுவதும் உள்ள அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கான நிலக்கரி கையிருப்பு என்பது குறைந்து வருகிறது. இதனால் விரைவில் நிலக்கரி தட்டுப்பாடு என்பது உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலைகளில் முக்கிய எரிபொருள் நிலக்கரி என்பதால் அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டியுள்ளது. இதனால் 50 கிலோ எடை கொண்ட ஒரு சிமெண்ட் மூட்டையின் உற்பத்தி விலை 60 ரூபாய் அதிகரிக்கும் நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிமெண்ட் உற்பத்தி விலை 60 ரூபாய் அதிகரிக்கும் பட்சத்தில் நுகர்வோருக்கு விற்கப்படும் விலையும் அதிகரிக்கும், உதாரணமாக ஒரு மூட்டை சிமெண்ட் 340 ரூபாய் என இருந்தால் 400 ரூபாய்க்குமேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரோனா ஊரடங்கிற்குப் பிறகு கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் சிமெண்ட் விலையேற்றம் என்பது நுகர்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT