ADVERTISEMENT

சிறுவர்களை வன்புணர்வு செய்த கத்தோலிக்க கார்டினலுக்கு 6 ஆண்டு சிறை!

01:08 PM Aug 21, 2019 | rajavel



ADVERTISEMENT


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கார்டினல் ஜார்ஜ் பெல் (Cardinal George Pell) அவர்களுக்கு சிறுவர்களை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப் பட்டுள்ளது. இந்த வருடம் மார்ச் 13 ஆம் தேதி கீழ்க் கோர்ட்டில் விதிக்கப்பட்ட 6 ஆண்டுக் கால சிறைத் தண்டனையை எதிர்த்து கார்டினல் பெல் மேல் முறையீடு செய்திருந்தார். அவருடைய மேல்முறையீட்டை ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரிய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு விதிக்கப் பட்டிருந்த 6 ஆண்டு சிறைத் தண்டனையை நேற்று (20/08/2019) உறுதி செய்தது.
கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவருக்கு அடுத்த நிலையில் உள்ள கத்தோலிக்க மத குருமார்களுக்கு “கார்டினல்” என்று பெயர். ஒரு போப்பாண்டவர் மறைகிற பொழுது, அடுத்த போப்பாண்டவர், இந்த கார்டினல்கள் என்கிற மத குருமார்களில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப் படுவார்.

ADVERTISEMENT


போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் நோய்வாய்ப்பட்டதன் காரணமாக 2013ஆம் ஆண்டு போப்பாண்டவர் பதவியைத் துறந்தார். அப்பொழுது போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் ஆஸ்திரேலியக் கார்டினலாக உள்ள ஜார்ஜ் பெல் தேர்ந்தெடுக்கப் படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அர்ஜெண்டைனாவைச் சேர்ந்த போப்பாண்டவர் ஃப்ரான்சிஸ் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

நல்ல வேளை கார்டினல் பெல் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப் படவில்லை. அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால் போப்பாண்டவருக்கே சிறைத் தண்டனையா என உலகம் வாயைப் பிளந்திருக்கும். விரிவான கட்டுரை பின்னர்.

-அண்ணாமலை மகிழ்நன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT