Skip to main content

ஆசையாய் அப்பா வாங்கி வந்த சாக்லேட்; மகனின் உயிரைப் பறித்த சோகம்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

An 8-year-old boy passed away because of chocolate; telangana

 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கன் சிங் என்பவர் தெலுங்கானா மாநிலத்திற்கு குடிபெயர்ந்து 20 ஆண்டுகள் ஆகிறது. கங்கன் சிங், தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் தெலுங்கானா மாநிலம் வாராங்கலில் வசித்து வந்தார்.

 

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று திரும்பிய கங்கன் சிங் தனது மகன்களுக்கு ஆசையாக சாக்லேட்டுகளை வாங்கி வந்துள்ளார். கங்கன் சிங்கின் இரண்டாவது மகன் சந்தீப் சிங் வாராங்கலில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். 

 

சனிக்கிழமை காலை பள்ளிக்கு செல்லும் போது தந்தை வாங்கி வந்த சாக்லேட்டுகளை பள்ளிக்கு கொண்டு சென்ற சந்தீப் சிங் காலை 10 மணியளவில் அதைச் சாப்பிட்டுள்ளார். சாக்லேட் தொண்டையில் சிக்கியதால் மூச்சு விட முடியாமல் தவித்த அவரை, பள்ளி நிர்வாகம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அதே சமயத்தில் சந்தீப் சிங்கின் பெற்றோரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளது.

 

மருத்துவமனையில் சந்தீப் சிங்கினை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். எனினும் சந்தீப் சிங்கின் குடும்பத்தினர் எவ்வித புகாரும் கொடுக்காததால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தீவிரமான மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Tamilisai Selandararajan's explanation of his resignation

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “3 ஆண்டுகள் எப்படி ஓடியது என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆளுநர் பதவியில் அதிகமாக முதல்வர்களை பார்த்ததில் பெருமை கொள்கிறேன். 4 முதல்வர்களை எனது பதவியின் போது பார்த்து பயணித்துள்ளேன். வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வந்தால், நான் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் இணைந்து 25 ஆண்டுகள் ஆகிறது. மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஆண்டவனும், ஆள்பவனும் தான் முடிவு செய்வார்கள். புதுச்சேரியை வேறு மாநிலம் என்று எப்போதும் பார்த்ததில்லை. தன்னை வேறு மாநிலத்தவர் என்று யாரும் பார்க்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழிசை செளந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி சார்பாக பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில், புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் தூத்துக்குடி அல்லது புதுச்சேரியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகத் தான் மனமுவந்து ராஜினாமா செய்திருக்கிறேன். தெலங்கானா, புதுச்சேரி மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கும் நான் நன்றியுடையவளாக இருப்பேன். மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நான் மக்கள் ஆளுநராக தான் இருந்தேன். என்னுடைய ராஜினாமா ஏற்றுக்கொண்ட பிறகு என்னுடைய எதிர்கால திட்டத்தை பற்றிச் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மக்கள் சேவைக்காக மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலுங்கானா மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. நான் எப்போதும் தெலுங்கானாவின் சகோதரி. அவர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.

Next Story

சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது; அமலாக்கத்துறை அதிரடி!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Former Telangana CM's daughter Kavitha arrested; Enforcement action

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இத்தகைய சூழலில், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர் ராவ் மகள் கவிதா இல்லத்தில் இன்று (15.03.2024) நாள் முழுவதும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கவிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலங்கானா மாநிலம் முழுவதும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் பி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் சார்பில் வெயிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், கவிதா இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சித் தலைவர்  கே.டி.ஆர். ராவ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், “ சோதனை நடந்து முடிந்துள்ளது. கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கவிதா வர மறுக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.