ADVERTISEMENT

70 ஆண்டுகளில் கம்போடிய முதல் பெண் ஜனாதிபதி!

06:30 PM Aug 23, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கம்போடியாவில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஜூலை 23 நடைபெற்றது. அதில், ஆசியாவின் நீண்ட கால ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்ற, எழுபது வயதான ஹூன் சென் மீண்டும் பிரதமராக தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் தனது மகன் ஹூன்மான்ட்டை பிரதமராகவும் அறிவித்தார். 70 வருடங்களாக கம்போடியாவில் பெண் ஜனாதிபதியாக எவரும் பதவி வகிக்கவில்லை. இந்நிலையில், கம்போடியாவின் தேசிய சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தலைவராக குவான் சுதாரி செவ்வாய்க்கிழமை முதல் புதிய ஐந்தாண்டு காலத்திற்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் கம்போடியா நாட்டின் வரலாற்றில் உயர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி ஆனார்.

கம்போடியாவின் நேஷனல் டெலிவிஷன் ஆஃப் கம்போடியா'வின் (டிவிகே) கருத்துப்படி, 70 வயதான குவான் சுதாரி, தற்போது ஆளும் கம்போடிய மக்கள் கட்சியின் நிலைக்குழுவில் உறுப்பினராகவும், தேசிய சட்டமன்றத்தின் இரண்டாவது துணைத் தலைவராகவும் உள்ளார். கம்போடியாவில் ஜூலை 23 நடந்த பொதுத் தேர்தலில் கம்போடிய மக்கள் கட்சி, தேசிய சட்டமன்றத்தில் 125 இடங்களில் 120 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பெற்றது. பின்னர் சுதாரி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் போது சுமார் 123 சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை ஒருமனதாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர் என்பது கவனிக்கத்தக்கது. 1990களில் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார் சுதாரி. தேசிய சட்டமன்றத்தின் தலைவராவதற்கான அவரது பயணம் என்பது பல ஆண்டுகளாக அரசியல் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாட்டுடன் அமைந்தது. அவர் முன்பு வகித்த தேசிய சட்டமன்ற இரண்டாவது துணைத் தலைவர் பதவிதான் சுதாரியின், இந்தப் புதிய பொறுப்பை ஏற்க அவருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

இது குறித்து கம்போடியாவின் ராயல் அகாடமியின் ( பல்கலைக் கழகம் ) பொதுச் செயலாளர் யாங் பியூ, "தேசத்திற்குக் கிடைத்த ஒரு குறிப்பிடத்தக்க கௌரவமாக பார்க்கிறேன்" என்றார். தொடர்ந்து, கம்போடியாவிற்கும், தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்த நியமனம் முக்கிய தருணம். கம்போடியாவில் முதன்முறையாக பெண் ஒருவர் சட்டப் பேரவைத் தலைவராக பதவியேற்றுள்ளார். இந்த சாதனை வெறும் மைல்கல் அல்ல, இது நமது தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்,'' என குறிப்பிட்டார்.

உலகின் முதல் பெண் ஜனாதிபதி அர்ஜென்டினாவின் மர்ம எஸ்டெலா 'இசபெல்' மார்டினெஸ் கார்டாஸ் டி பெரோன் ஆவார். இவர் 1974 முதல் 1976 வரை அர்ஜென்டினாவின் ஜனாதிபதியாக இருந்தார். தனது கணவர் ஜனாதிபதி ஜுவான் பெரோன் பதவியில் இருந்த போது இறந்துவிட்டார். இதனால் இசபெல் ஜூலை 1, 1974 முதல் மார்ச் 24, 1976 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார். உலகின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஜனாதிபதி ஐஸ்லாந்தின் விக்டிஸ் ஃபின்போகாட்ஸ்டிர் ஆவார். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 2007 ம் ஆண்டு முதல் பெண் ஜனதிபதியாக பிரதீபா பாட்டிலை நியமித்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT