ADVERTISEMENT

எரிமலை குழம்பில் இருந்து செங்கற்கள்... அசத்தும் பிலிப்பைன்ஸ் அரசு!

10:18 AM Jan 21, 2020 | suthakar@nakkh…

எரிமலை குழம்பில் இருந்து பிலிப்பைன்ஸ் அரசு செங்கல் தயாரித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நிறைய எரிமலைகள் உள்ளன. மாதந்தோறும் ஏதாவது ஒரு எரிமலை வெடித்து லாவா குழம்பை வெளியிடும். மேலும் அந்த எரிமலை குழம்பு காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதனை முறைபடுத்துவதற்கு அந்நாட்டு அரசு தற்போது புதிய வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.


ADVERTISEMENT


அதன்படி, லாவா குழம்புகளை சேகரித்து அதனை செங்கற்களாக தயாரித்துள்ளனர். நாளொன்றுக்கு முதற்கட்டமாக தற்போது 5000 செங்கற்கள் தயாரிக்கப்படுவதாகவும் பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. களிமண் செங்கற்களை விட இது உறுதியாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படிபடியாக செங்கற்கள் தயாரிப்பு எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT