ADVERTISEMENT

அரை நூற்றாண்டுக்கும் மேல் உடலில் தண்ணீர் பட்டதே இல்லை... ஆனாலும், ஆரோக்கியமாக வாழும் அதிசய மனிதர்...

12:11 PM Jan 23, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரான் நாட்டைச் சேர்ந்த 87 வயதான முதியவர் கடந்த 67 ஆண்டுகளாகக் குளிக்காமலேயே வாழ்ந்துவருகிறார். உலகிலேயே அழுக்கான மனிதர் என இவர் அறியப்படுகிறார்.

தெற்கு ஈரான் பகுதியில் உள்ள தேஜ்கா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அமோவ் ஹாஜி. இவருக்குத் தண்ணீர் மீது பயம் என்றும் தன் உடலில் தண்ணீர் பட்டால் அதன் மூலமாக தனக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் எனும் பயத்தினாலும் 67 ஆண்டு காலமாக அவர் குளிக்காமல் வாழ்ந்துவருவதாகத் தெரிகிறது.

தண்ணீரே படாத அமோவ் ஹாஜியின் உடல், தூசிகளாலும், மண்ணாலும் போர்த்தப்பட்டுள்ளது. இவர், ஈரானின் பாலைவனத்தில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு வீட்டினுள் வாழ்வதும் பிடிப்பதில்லை. அதனால், பாலைவனத்தில் இருக்கும் பொந்துகளையே தனது வாழ்விடமாக வைத்துள்ளார். இவருக்கென அந்த கிராம மக்கள் ஒரு வீட்டை தயார்படுத்திக் கொடுத்தும் அதனை அவர் மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.


தண்ணீர் மட்டுமல்ல சமைத்த உணவு என்றாலும் அமோவ் ஹாஜிக்கு அலர்ஜி. அவர் அதிகம் விரும்புவது மாமிசம் என்றும் அதுவும் அழுகிய மாமிசம் என்றும் சொல்லப்படுகிறது. உடல் மீது தண்ணீர் என்றால் மட்டும்தான் அமோவ் ஹாஜிக்கு அலர்ஜி. ஆனால், ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பார். சிறுவயதில் தனது வாழ்நாளில் ஏற்பட்ட ஏதோ ஓர் நிகழ்வின் காரணமாக அவர் தனிமையை விரும்புகிறார் என்கிறார்கள் அவரை பார்ப்பவர்கள். இவருக்குப் புகைக்கும் பழக்கம் இருக்கிறது. குளிக்காமல், அழுக்கு உடலுடன், அழுகிய மாமிசத்தை உண்டு வாழ்ந்துவரும் அமோவ் ஹாஜிக்கு உடல்நிலை நலமாக இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT