நேற்று அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு ஒரே நாளில் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இன்றும் இந்த விலையேற்றம் தொடர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 11 காசுகள் விலை உயர்ந்து 78 ரூபாய் 39 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் விலை அதிகரித்து 72 ரூபாய் 28 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று ஒருநாளில் ஒருநாளில் 2 டாலர் 41 செண்ட் அதிகரித்து ஒரு பீப்பாய் 68.66 டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.