ADVERTISEMENT

ஒமிக்ரான் துணை மாறுபாட்டை கவலைக்குரியதாக அறிவியுங்கள் - ஆய்வை சுட்டிக்காட்டி அமெரிக்க நிபுணர் கோரிக்கை!

03:03 PM Feb 21, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா மற்றுமின்றி பல்வேறு நாடுகளிலும் அண்மையில் மீண்டும் கரோனா அலை ஏற்பட்டது. இந்த அலைக்கு அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வகை கரோனாவே காரணமாக இருந்தது. இந்தநிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2 மாறுபாடு அதிகம் பரவியது.

இந்தநிலையில் ஜப்பானில் நடைபெற்ற ஆய்வின் ஒன்றின் முடிவுகள், பிஏ.2 மாறுபாடு ஒமிக்ரானை விட அதிகம் பரவலாம் எனவும், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும், தடுப்பூசி தரும் எதிர்ப்பு சக்தியிலிருந்து பிஏ.2 மாறுபாடு தப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வை சுட்டிக்காட்டியுள்ள முன்னணி பொது சுகாதார நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங், ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2வை கவலைக்குரிய கரோனா வகையாக அறிவிக்குமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT