Published on 04/01/2022 | Edited on 04/01/2022

கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை சில புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.