ADVERTISEMENT

ஐநாவிலிருந்து வெளியேறிய அமெரிக்கா!! - முட்டுக்கட்டை போடும் நாடுகளே காரணமா ?

04:50 PM Jun 20, 2018 | vasanthbalakrishnan

ஐநா அமைப்பிற்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். அந்த அறிவிப்பில்,

ADVERTISEMENT

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தற்போது கேலிக்கூத்தாக செயல்பட்டு வருகின்றது என குற்றம்சாட்டினர், அதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகவும் தெரிவித்தனர். மனித உரிமை ஆணையத்தை சீரமைக்க அமெரிக்கா எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் ரஷ்யா, சீனா, எகிப்து, கியூபா போன்ற நாடுகள் முட்டுகட்டை இட்டுவருகிறது எனவே ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஏற்கனவே காஸா எல்லை பிரச்சனையில் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதை அமெரிக்கா வன்மையாக கண்டித்து வந்தது. இந்த நிலை தொடர்ந்தால் அமரிக்கா ஐநா சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகிவிடும் எனவும் அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க அமெரிக்க எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறும் குறிப்பிட்ட வயதுகொண்ட மக்களை கைது செய்து அவர்களின் குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரித்துவைத்த நடவடிக்கையால் அமெரிக்கா பல விமர்சனங்களை சந்தித்தது. இப்படி பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரித்துவைப்பதற்கு ஐநா மனித உரிமை கவுன்சில் தனது கடுமையான கண்டனத்தை அமெரிக்காவிற்கு தெரிவித்தது. இதனாலே இந்த விலகல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்கா யூனஸ்க்கோ அமைப்பு மற்றும் பாரிஸ் பருவநிலை அமைப்பு என இரண்டு அமைப்பில் பிரிவை சந்தித்தது. தற்போது ஐநா மனித உரிமை ஆணையத்திலிருந்தும் அமெரிக்கா விலகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT