அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை எல்லை பகுதியிலேயே கைது செய்து கைது செய்யப்பட்டவர்களின் குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரித்துவைக்கப்படும் அமெரிக்காவின் நடவடிக்கை உலக அளவில் எதிர்ப்பை பெற்றுள்ளது.

Advertisment

trump

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

கடந்த மே மாதம் 5-ஆம் தேதி முதல் ஜூன் 9- ஆம் தேதி வரை மட்டும் சுமார் 2342 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரித்துவைக்கப்பட்டதாக அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைக்கு ஐநா மனித உரிமை ஆணையமும் கடுமையான கண்டனத்தை அமெரிக்காவிற்கு தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து அமெரிக்காஐநா சபை உறுப்பினர் நிக்கி ஹாலே அமரிக்கா ஐநாவின் மனித உரிமை ஆணையத்திலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இப்படி பல்வேறு உலக எதிர்ப்புகளை சந்தித்த டிரம்ப் தலைமை தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக அறிவித்திருக்கிறது. அதன்படி புதன் கிழமையன்று டிரம்ப் பிறப்பித்த உத்தரவில் பெற்றோர்களைகுழந்தைகள்பிரிந்திருக்கும் காட்சி தனக்கு பார்க்க பிடிக்கவில்லை எனவே இந்த பிரிக்கும் முறையை கைவிட்டு பெற்றோர் குழந்தைகள் என இருவரையும் ஒரே இடத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளார், இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பித்தl டிரம்ப், ஆனால் அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடிபுகுபவர்கள் மேல் எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தண்டிப்பில் துளியும் சகிப்புத்தமை இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.