ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா!

05:00 PM Feb 02, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரபு மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் கூட்டு படைகள் சவுதி அரேபியா தலைமையில் ஹவுதி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனையடுத்து ஹவுதி அமைப்பு, அந்த கூட்டு நாடுகளுக்கு எதிராக தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த மாதம் ஹவுதி அமைப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்களும், ஒரு பாகிஸ்தானியரும் உயிரிழந்தனர். அந்த தாக்குதல் நடைபெற்ற ஒரே வாரத்தில், ஹவுதி அமைப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் அமெரிக்க படைகள் தங்கியுள்ள தளத்தை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அதனை அமெரிக்க இராணுவம், தடுத்து அழித்தது.

இதன்பின்னர் கடந்த திங்களன்று மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. அதனை ஐக்கிய அரபு அமீரகத்தின் படைகள் தடுத்து அழித்தன. இந்தநிலையில் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத்திடம் தொலைபேசி வாயிலாக பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், தற்போதைய அச்சுறுத்தலுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உதவும் வகையில், 5 ஆம் தலைமுறை போர் விமானங்களையும், வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை அழிக்கும் யுஎஸ்எஸ் கோல் என்ற அமைப்பையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT