/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/JURN-IN.jpg)
சவுதி பத்திரிகையாளர் ஜாமால் கஷோகி,கடந்த அக் 2-ஆம் தேதி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் செனறார் அதன் பிறகு அவரை காணவில்லை. அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் அவர் கட்டுரை எழுதிவந்ததால் இந்த விஷயம் தொடர்பாக அமெரிக்கா ஊடகங்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பத் தொடங்கின. அதன் பின், இரண்டு வாரங்களுக்குப் பின்பு சவுதி தூதரகத்தில் ஜாமால் கஷோகி கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக துருக்கி அரசும் அறிவித்தது. அதனை தொடர்ந்து இரண்டு நாட்க்களுக்கு முன், கஷோகி கொல்லப்பட்டதாக சவுதி அரசும் ஒப்புகொண்டது. மேலும் கஷோகி மரணம் தொடர்பாக தன்னுடைய உளவுத்துறைத் தலைவர் உட்பட 18 பேரைக் கைது செய்திருப்பதாகவும் பத்திரிகையாளர் கொலையில் தொடர்பு உடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவுதி அரசு அமெரிக்காவிற்கு உறுதியளித்திருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)